முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 29 மனுக்கள் பெறப்பட்டன


முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் 29 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 13 May 2022 12:27 AM IST (Updated: 13 May 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் படை வீரர்களிடமிருந்து நில ஒப்படைப்பு, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. மேலும் சென்ற முறை குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழக அரசு முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் வட்டி மானியத்திட்டம், தொழிற்கடன் மானியம், அரசு போட்டித்தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 13 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் செண்பகவல்லி மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.

Next Story