இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்
நடராஜர் நடனத்தை அவதூறாக பேசியதை கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்குடி,
நடராஜர் நடனத்தை அவதூறாக பேசியதை கண்டித்து காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் அக்னிபாலா தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் எஸ்.ஆர்.தேவர், மாவட்ட செயலாளர் நாகராஜன், நகர தலைவர் பாரதி பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன், நகர தலைவர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story