தொழிலாளி வீட்டில் நகை திருட்டு
பண்ருட்டி அருகே தொழிலாளி வீட்டில் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி
பண்ருட்டி அடுத்த முத்து நாராயணன்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் அங்குசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற உறவினர் இல்ல காதணி விழாவிற்கு சென்றிருந்தார். அதன்பிறகு விழா முடிந்ததும் ராஜேந்திரன் குடும்பத்துடன் வீடு திரும்பினார்.
அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள நகை, வெள்ளி பொருட்களை காணவில்லை. ராஜேந்திரன் குடும்பத்துடன் வெளியூா் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரனின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story