விவசாயி வீட்டில் 7 பவுன் தங்க சங்கிலி திருட்டு
விவசாயி வீட்டில் 7 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகே விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 45). விவசாயி. இவர் நேற்று அதிகாலை எழுந்து நடை பயிற்சிக்கு செல்லும் போது தனது வீட்டின் கதவை மூடாமல் சென்றுவிட்டார். இதனையறிந்த மர்மநபர் இவரது வீட்டிற்குள் சென்று வீட்டின் மேஜை மீது வைத்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்று விட்டார்.
பின்னர் நடைபயிற்சி முடித்து வீட்டுக்கு வந்த கோவிந்தராசு மேஜையின் மீது வைத்திருந்த தங்க சங்கிலி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கோவிந்தராசு கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story