பாம்பு கடித்து பெண் சாவு
பாம்பு கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 52). இவர் நேற்று தனது கூரை வீட்டில் மண் சுவற்றில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்காக மண் குழைத்து கையால் பூசி உள்ளார். அப்போது சுவற்றின் ஓட்டையில் இருந்த பாம்பு பச்சையம்மாளை கடித்து உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பச்சையம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story