2 போலீஸ்காரர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம்


2 போலீஸ்காரர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 13 May 2022 1:00 AM IST (Updated: 13 May 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் துப்பாக்கியுடன் கைதியின் உறவினர் எடுத்து வெளியிட்ட வீடியோ விவகாரத்தில், 2 போலீஸ்காரர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.

சாத்தூர், 
போலீஸ் துப்பாக்கியுடன் கைதியின் உறவினர் எடுத்து வெளியிட்ட வீடியோ விவகாரத்தில், 2 போலீஸ்காரர்களை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார்.
துப்பாக்கியுடன் வீடியோ
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக அன்பரசனும், ஆறுமுகவேலும் பணியாற்றி வந்தனர். 
இந்தநிலையில் விருதுநகர் கிளை சிறையில் இருந்து விசாரணைக்காக ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்துக்கொண்டு துப்பாக்கியுடன் விருதுநகர் கோர்ட்டுக்கு சென்றனர். 
கோர்ட்டில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு, பின்னர் அருகே உள்ள ஒரு டீக்கடையில் 2 போலீஸ்காரர்களும் டீக்குடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் 2 போலீஸ்காரர்களும் துப்பாக்கியை கொடுத்துவிட்டு டீக்குடித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 
இந்தநிலையில், அந்த நபர் போலீஸ் துப்பாக்கியுடன் தன்னை வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதாகவும், இந்த வீடியோ பரவி சர்ச்சையானதாகவும் தெரியவருகிறது.
பணியிடை நீக்கம்
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் விசாரணை நடத்தினார். வெளியாளிடம் போலீஸ் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக போலீஸ்காரர்கள் அன்பரசன், ஆறுமுகவேல் ஆகிய இருவரையும் அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story