சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு சூப்பிரண்டு பாராட்டு
சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளை, சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளை, சூப்பிரண்டு பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சிறப்பான பணி
மதுரை மாவட்டத்தில் பணியின் போது, சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அதன்படி குண்டர் தடுப்பு சட்ட கோப்புகளை விரைந்து தயார் செய்து சிறப்பாக பணி செய்ததற்காக சப்-இன்ஸ்பெக்டர் புதுராஜா, கொடுஞ்செயல் குற்றதடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் ராமர், முகமது யாசின், பிரகாஷ் ஆகியோருக்கும், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை, பதுக்கல் போன்ற குற்றங்களை கண்டுபிடித்ததற்காக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் மற்றும் அவருடன் பணிபுரிந்த காவலர்கள் சுப்பிரமணியன், அருண், சின்ன அதியன், கணபதி, மதிவாணன், வயக்காட்டு சாமி, முத்து மற்றும் சத்யராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை
சிலைமான், கருப்பாயூரணி, ஒத்தக்கடை போலீஸ் நிலையங்களில் தாக்கலான 17 திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்த 114 பவுன் தங்க நகைகள் மீட்ட சிலைமான் காவல் நிலைய தலைமைக் காவலர் காந்தி, ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் 16 வழக்குகளில் 12 வழக்குகள் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், 4 வழக்குகளை முடித்து சிறப்பான செயல்களை செய்த ஒத்தக்கடை போலீஸ் தலைமைக் காவலர் மாணிக்கம், குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து நீதிமன்ற வழக்கு கோப்புக்கு எடுக்க உதவியாக இருந்த மேலூர் காவல் நிலைய தலைமை காவலர் கண்ணன், கீழவளவு காவல் நிலையத்தில் உள்ள வழக்கு கோப்புகளை எழுதி விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உதவியாக இருந்த கீழவளவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
முதல்- அமைச்சர் வருகை
28 கிலோ போதை பொருட்கள் மற்றும் ஒரு லாரி, ஒரு கார் மற்றும் குற்றவாளிகளை கைது செய்த பெருங்குடி சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், தலைமை காவலர் லிங்கம், திருமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், மாரி கண்ணன், தலைமை காவலர் ராஜா ஆகியோருக்கும், உசிலம்பட்டியில் கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க உதவிய தலைமை காவலர் தவராஜா, முதல்நிலை காவலர்கள் முருகன், கணேசன், தமிழக முதல்- அமைச்சர் வருகையின்போது சிறப்பாக பணி செய்த நாகமலை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் மற்றும் முதல் நிலை காவலர் பிரேம்நாத் ஆகியோருக்கும், நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் பதிவான குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் காவலர் முரளி தலைமை காவலர் விஜயகுமார், காவலர் கண்ணன் ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story