சூரப்பள்ளம் சூரமகாகாளியம்மன் கோவில் தூக்குத்தேர் திருவிழா
சூரப்பள்ளம் சூரமகாகாளியம்மன் கோவிலில் நடந்த தூக்குத்தேர் திருவிழாவில் திரளானோர் தேரை தோளில் சுமந்து வந்தனர்.
கரம்பயம்:
சூரப்பள்ளம் சூரமகாகாளியம்மன் கோவிலில் நடந்த தூக்குத்தேர் திருவிழாவில் திரளானோர் தேரை தோளில் சுமந்து வந்தனர்.
சூரப்பள்ளம் சூரமகாகாளியம்மன்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் கிராமத்தில்
சூரமகாகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் தேரை ஊர் மக்கள் தோளில் சுமந்து தூக்குத்தேர் திருவிழா நடைபெறுவது பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் சித்திரை 2-வது செவ்வாய்க்கிழமை
கோட்டை கோவிலில் இருந்து கோவிலுக்கு அம்மன் உற்சவ சிலையை கொண்டுவந்து காப்பு அணிவித்து திருவிழா தொடங்கியது.
தூக்குத்தேர் திருவிழா
விழாவையொட்டி 3-வது செவ்வாய்க்கிழமை முதல் மண்டகப்படி தொடங்கியது. இதில் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தூக்குத்தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் கீழத்தெரு, நடுத்தெரு, மேலத்தெரு, கட்ட வேளாளர் தெரு ஆகிய நான்கு தெருக்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அலங்கரிக்கப்பட்ட தூக்கு தேரை தங்கள் தோளில் சுமந்து வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், ஊர் பிரமுகர்கள், கிராமமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story