பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில் உண்டியலில் ரூ.11½ லட்சம் காணிக்கை
பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில் உண்டியலில் ரூ.11½ லட்சம் காணிக்கை
பேராவூரணி:
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் சித்திரை திருவிழா நடந்தது. இந்த கோவிலுக்கு பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினமும் வருகின்றனர். இவர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற கோவில் உண்டியலில் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை செலுத்துகின்றனர். இந்தநிலையில் நேற்று தஞ்சை அறநிலையத்துறை உதவி ஆணையர் தமிழ்ச்செல்வி, பேராவூரணி அறநிலையத்துறை ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் சிதம்பரம், பரம்பரை அறங்காவலர் குழுத் தலைவர் கணேசன் சங்கரன், அறங்காவலர் குப்பமுத்து சங்கரன், முடப்புளிக்காடு கிராமத்தினர், ஸ்தானிகர் சங்கரன் வகையறாக்கள் ஆகியோர் முன்னிலையில், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.11 லட்சத்து 49 ஆயிரத்து 777 மற்றும் 17.5 கிராம் தங்கம், 419 கிராம் வெள்ளி ஆகியவற்றை செலுத்தியிருந்தனர்.
Related Tags :
Next Story