எண்ணெய் ஆலை ஊழியர் தவறி விழுந்து சாவு


எண்ணெய் ஆலை ஊழியர் தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 13 May 2022 1:14 AM IST (Updated: 13 May 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

மல்லாங்கிணறு அருகே எண்ணெய் ஆலை ஊழியர் தவறி விழுந்து இறந்தார்.

காரியாபட்டி,
மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வில்லிபத்திரி அருகே உள்ள ஒரு தனியார் எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த அருணாசலம் மகன் வேடராஜன் (வயது 30) என்பவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் 5 அடி உயரமுள்ள நாற்காலியிலிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். உடனே வேடராஜனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story