வரதராஜ பெருமாள் கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம்
வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது.
தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டையில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், உபய நாச்சிகள் சமேத உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனமும், ஹோமங்களும் நடைபெற்றன. அதன்பின்னர் வரதராஜ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கிருஷ்ணராக எழுந்தருளினார். கிருஷ்ணர் அலங்காரத்தில் வெண்ணைத்தாழி உற்சவம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் நெல் அளவை கண்டு அருளினார். அதன்பிறகு சூர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பாசுரங்களைப்பாடி வழிபாடுகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story