மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி தங்க பதக்கம் பெற்றார்


மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி தங்க பதக்கம் பெற்றார்
x
தினத்தந்தி 13 May 2022 1:18 AM IST (Updated: 13 May 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி தங்க பதக்கம் பெற்றார்.

மதுரை, 
மதுரை மாநகராட்சி அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருபவர் ஜெர்லின் அனிகா. இவர் செவித்திறன் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் பிரேசிலில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் இறகு பந்து போட்டியில் இந்திய அணி சார்பாக பங்கேற்றார். அதில் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் அவர் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்க பதக்கமும், இந்திய அணி இறகு பந்து குழு போட்டியில் கலந்து கொண்டு 1 தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். தங்கப்பதக்கம் பெற்று ஜெர்லின் அனிகாவை, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மேயர் இந்திராணி ஆகியோர் பாராட்டினர். மாணவி ஜெர்லின் அனிகா, கடந்த 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த ஆசியா பசிபிக் இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கமும், 2019-ம் ஆண்டு சீனா தைபேயில் நடந்த சிறப்பு பிரிவினருக்கான 2-வது உலக இறகு பந்தாட்டம் சாம்பியன்ஷிப் தொடர் போட்டியில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story