மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் உத்தரவு
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டா மாறுதல் கோரி மனுக்கொடுத்தவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதலுக்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பட்டா மாறுதல் கோரி மனுக்கொடுத்தவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதலுக்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.
குறை தீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஏற்பாட்டின் பேரில் தாலுகா அளவில் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கை தாலுகா அளவிலான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதியோர் உதவிதொகை கோருவது, அரசு நில ஆக்கிரமிப்பை அகற்றுவது., பட்டா திருத்தம் செய்வது, சான்றிதழ் கோருவது உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
வட்ட அளவில்..
பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்ப்பதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தபட்டது.இதற்கு பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதனால் ஏற்படும் நேரம் விரயம் மற்றும் பொருளாதார விரயத்தை தவிர்த்திடும் பொருட்டும், பொதுமக்களுக்கு விரைவாக அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பொருட்டும், மாவட்டத்தில் ஒவ்வொரு வட்ட அளவிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு, குறைகளை, தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் சிவகங்கையில் தற்போது குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை ஏடுகளில் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு நேரடியாக வழங்கி, அம்மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வாராந்திர அறிக்கை வழங்கிடவும், மனுக்கள் மீது கள ஆய்வு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
2 பேருக்கு...
கூட்டத்தில் பட்டா மாறுதல் கோரி மனுக்கொடுத்த 2 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையினையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு அங்கீகாரச்சான்றினையும் கலெக்டர் வழங்கினார்.
Related Tags :
Next Story