தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு
தஞ்சையில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தினை மீட்டனர். மேலும் இதற்கான அறிவிப்பு நோட்டீசை மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடையில் ஒட்டினர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 76,740 சதுரஅடி பரப்பளவு கொண்ட இடத்தினை மீட்டனர். மேலும் இதற்கான அறிவிப்பு நோட்டீசை மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடையில் ஒட்டினர்.
மாநகராட்சி இடம்
தஞ்சை அண்ணாசாலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையில் உள்ளது ஜூபிடர் திரையரங்கம். இதன் அருகே உள்ள மாநகராட்சிக்குசொந்தமான காலி இடத்தினை ஆக்கிரமித்துக் கொண்டு இருவர் கடைகளை கட்டி வைத்திருந்தனர். இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான இடமாக இருந்ததால், இந்த இடத்தை மீட்க மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அதன்படி நேற்று நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் உதவி வருவாய் ஆய்வாளர் சங்கரவடிவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், மகேந்திரன் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில், தண்டோரா மூலம் அறிவிப்பினை வாசித்து, ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள கடைகளின் கதவுகளில் நோட்டீசைஒட்டினர்.
76,740 சதுரடி பரப்பளவு
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் கூறுகையில், “தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான 76,740 சதுர அடி பரப்பளவு கொண்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான இந்த இடம் தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின் படி தனியா் ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடங்களில் அத்துமீறி செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Related Tags :
Next Story