மானாமதுரையில், இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு
மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து உள்ளது.
மானாமதுரை
மானாமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு அதிகரித்து உள்ளது. குறிப்பாக வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மாயமாகி விடுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் மாரிமுத்து மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு இரவு பணிக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தால் மோட்டார் சைக்கிளை காணவில்லை. மானாமதுரை செட்டிய தெருவிலும் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருடு போய் இருந்தது. ெதாடர் திருட்டால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு இருசக்கர வாகன திருடர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story