விவசாய நிலத்தில் பார் அமைக்க எதிர்ப்பு
விவசாய நிலத்தில் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூரில் திருமழபாடி செல்லும் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு அருகே உள்ள மற்றொரு சர்வே எண்ணில் விவசாய நிலத்தில் தற்போது பார் அமைக்க அனுமதி அளித்து அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அரசு விதிமுறைகளை படி விவசாய நிலங்களில் பார் அமைக்கக்கூடாது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கக்கூடும் என்பதால் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story