உலக செவிலியர் தின கொண்டாட்டம்


உலக செவிலியர் தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 2:40 AM IST (Updated: 13 May 2022 2:40 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

அரியலூர், 
மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து செவிலியராக சேவையாற்றி மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12-ந்தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி  அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். அதன்பிறகு கேக் வெட்டியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முத்துகிருஷ்ணன், டாக்டர்கள் கண்மணி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதே நேரத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பாக 2019-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு டிசம்பர் வரை கிராம சுகாதார செவிலியர் பணி பயிற்சி முடித்தவர்களுக்கு இதுநாள் வரை பணி வழங்கப்படாததால் செவிலியர் தினத்தை கொண்டாட முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். மேலும் கொரோனா காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றியதாகவும், ஆனால் தங்களுக்கு செவிலியர் பணி வழங்காததால் தங்களது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் தெரிவித்தனர். எனவே தமிழகம் முழுவதும் பணி முடித்து உள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கிராம சுகாதார செவிலியர் பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story