கால்வாயில் தவறி விழுந்து பாடகர் படுகாயம்


கால்வாயில் தவறி விழுந்து பாடகர் படுகாயம்
x
தினத்தந்தி 13 May 2022 2:50 AM IST (Updated: 13 May 2022 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து பாடகர் படுகாயம் அடைந்தார்.

பெங்களூரு:

கன்னட சினிமா துறையில் பாடகராக பணியாற்றி வருபவர் அஜய் வாரியர். இவர் பெங்களூரு தொட்டகல்லசந்திரா பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கேரளாவில் வசித்து வரும் உறவினர்களை பார்க்க அஜய் வாரியர் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது தொட்டகல்லசந்திரா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே திறந்து கிடந்த சாக்கடை கால்வாயில் அவர் தவறி விழுந்தார். இதில் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அஜயை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது காலில் படுகாயம் ஏற்பட்டு இருந்ததால் டாக்டர்கள் காலில் 13 தையல் போட்டு உள்ளனர்.

  இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள அஜய் வாரியர், ‘சாக்கடை கால்வாய் ஏன் திறந்து கிடந்தது என்று தெரியவில்லை. நான் உள்ளே விழுந்த போது கழுத்து வரை தண்ணீர் என்னை மூழ்கடித்தது. இதுவே ஒரு குழந்தை விழுந்தால் என்ன நிலை ஏற்பட்டு இருக்கும். ஆனால் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. எனக்கு நடந்த சம்பவத்திற்கு பின்னரும் அந்த சாக்கடை கால்வாயை மூடாதது தெரியவந்தது. இதனால் தான் நான் டுவிட்டரில் இதுபற்றி பதிவிடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Next Story