களக்காடு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு; அசைவ உணவுகள் பறிமுதல்


களக்காடு பகுதியில் அதிகாரிகள் ஆய்வு; அசைவ உணவுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 May 2022 2:52 AM IST (Updated: 13 May 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

களக்காடு பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது ஓட்டல்களில் கெட்டுப்போன அசைவ உணவுகளை பறிமுதல் செய்தனர்.

நெல்லை:
களக்காடு பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது ஓட்டல்களில் கெட்டுப்போன அசைவ உணவுகளை பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு

நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசிதீபா தலைமையில் நேற்று களக்காடு நகராட்சி பகுதியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சமையலுக்கு பயன்படுத்திய சமையல் எண்ணெயை திரும்ப பயன்படுத்தி வைத்திருந்த 5 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அசைவ உணவு செய்வதற்கு அதிகப்படியான செயற்கை நிறமிகள் மற்றும் சுவையூட்டிகள் கலந்த உணவுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு ஓட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட போது முந்தைய நாள் பயன்படுத்திய அசைவ உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 5 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

எச்சரிக்கை
இதுதவிர சாலையோர உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறாததாக வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.ஆய்வின் தொடர்ச்சியாக காலாவதி தேதி குறிப்பிடாத ஐஸ்கிரீம் வகைகள் 10 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 5 கிலோ பிளாஸ்டிக் பைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வில் களக்காடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரநாராயணன், முந்தராஜா, ராமகிருஷ்ணன் மற்றும் செல்பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story