பிறந்தநாள் விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து
சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் விழாவையொட்டி அவருக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
சேலம்,
பிறந்தநாள் வாழ்த்து
அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் மற்றும் பகுதி செயலாளர்கள் சரவணன், முருகன், பாலு, மாரியப்பன், ஜெயபிரகாஷ், யாதவமூர்த்தி, சண்முகம், பாண்டியன் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகளும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ.க்கள்
இதேபோல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பாலசுப்பிரமணியம், ராஜமுத்து, சுந்தரராஜன், சித்ரா, பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் மற்றும் முன்னாள் எல்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வெளியூர் நிர்வாகிகள் பலரும் நெடுஞ்சாலை நகருக்கு திரண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story