பள்ளி மாணவி தீக்குளிப்பு


பள்ளி மாணவி தீக்குளிப்பு
x
தினத்தந்தி 13 May 2022 3:03 AM IST (Updated: 13 May 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் அருகே பள்ளி மாணவி தீக்குளித்தார்.

சேரன்மாதேவி:
வீரவநல்லூர் பசும்பொன் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் பிரிய தர்ஷினி (வயது 14). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்திக்குக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடி‌க்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி நேற்று முன்தினம் இரவு தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து உள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story