நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது; பசவராஜ் பொம்மை பேச்சு


நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளது; பசவராஜ் பொம்மை பேச்சு
x
தினத்தந்தி 13 May 2022 3:06 AM IST (Updated: 13 May 2022 3:06 AM IST)
t-max-icont-min-icon

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கர்நாடகம் முன்னிலையில் உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சுரங்க பாதை தோண்டுதல்-கட்டமைத்தல் குறித்த சர்வதேச மாநாடு தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

  நாட்டை கட்டமைப்பதில் அரசுடன் தனியார் கட்டுமான நிறுவனங்கள் கைகோர்க்க வேண்டும். இதன் மூலம் பிரதமர் மோடியின் தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்ற முடியும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் கர்நாடகம் முன்னணியில் உள்ளது. அணைகள் கட்டுவதாக இருந்தாலும் சரி, மின் திட்டங்களை அமல்படுத்துவதாக இருந்தாலும் சரி, சுரங்க பாதைகள் அமைப்பதாக இருந்தாலும் சரி கர்நாடகம் முன்னிலையில் இருக்கிறது. 

கடந்த 197-ம் ஆண்டு முதல் மின் உற்பத்தி திட்டங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்காக பல்வேறு சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுரங்க பாதை அமைக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது. இந்த தொழிலாளர்கள் தான் நாட்டின் உண்மையான சொத்து. அதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Next Story