தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 May 2022 3:08 AM IST (Updated: 13 May 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சுகாதார சீர்கேடு
சகாயநகர் ஊராட்சிக்கு உட்பட்ட கிறிஸ்துநகர் மேலத்தெரு முன் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டி தீவைக்கின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், புகை மூட்டத்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அங்கு குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.வெற்றிவேந்தன், வெள்ளமடம்.
குளம் தூர்வாரப்படுமா?
நல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காரவிளை பகுதியில் சர்க்கரை குளம் (நெடுவாலி குளம்) உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் குளிப்பதற்கும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் குளத்தில் ஆகாய தாமரைகள் மற்றும் செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. எனவே, குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                              -சுரேஷ், காரவிளை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட திருவட்டாரில் இருந்து மாத்தூர் தொட்டிப்பாலம் செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                         -அர்ஜூன், மாத்தூர்.
சீரான குடிநீர் தேவை
தோவாளை தாலுகாவிற்கு உட்பட்ட மண்ணடி கிராமத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, கிராம மக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
-நாராயணசாமி, பூதப்பாண்டி.
எரியாத விளக்குகள்
நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை விவேகானந்தர் தெரு, கங்காநகர் 2-வது தெருவில் உள்ள மின் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி பழுதடைந்த விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்கு பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                    -முகமது சுகைல், பெருவிளை.
மாசடையும் குடிநீர்
தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் கழிவுநீர் ஓடை செல்வதால் குடிநீர் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                  -சூர்யா, புதூர்.

Next Story