சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,410-க்கு ஏலம்; ஒரே நாளில் 410 ரூபாய் உயர்ந்தது


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,410-க்கு ஏலம்; ஒரே நாளில் 410 ரூபாய் உயர்ந்தது
x
தினத்தந்தி 13 May 2022 3:40 AM IST (Updated: 13 May 2022 3:40 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.1,410-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 410 ரூபாய் உயர்ந்தது

சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு விவசாயிகள் 3 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு      வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.507-க்கும், முல்லை ரூ.180-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.67-க்கும், பட்டுப்பூ ரூ.75-க்கும், கனகாம்பரம் ரூ.1,410-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது. 
நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.385-க்கும், காக்கடா ரூ.300-க்கும், செண்டுமல்லி ரூ.69-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.400-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.140-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.122-ம், கனகாம்பரம் ரூ.410-ம், சம்பங்கி ரூ.10-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story