மருத்துவக்கல்லூரிமாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கிய கலெக்டர்


மருத்துவக்கல்லூரிமாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கிய கலெக்டர்
x
தினத்தந்தி 13 May 2022 3:43 AM IST (Updated: 13 May 2022 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி
மாணவர்களுக்கு கையடக்க கணினியை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத ஒதுக்கீட்டில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.        நிகழ்ச்சியில் 9 மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினிகளை கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் திருவாசகமணி, துணை முதல்வர் லியோ டேவிட், ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story