ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனையானது.
மாட்டுச்சந்தை
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தைக்கு 50-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தது. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை ஆனது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. ஈரோடு, கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 400 பசுமாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 600 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
பசுமாடு ரூ.64 ஆயிரம்
சந்தையில் பசுமாடு ஒன்று ரூ.35 ஆயிரம் முதல் ரூ.64 ஆயிரம் வரைக்கும், எருமை மாடு ஒன்று ரூ.26 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரைக்கும் விற்பனை ஆனது
கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள், விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story