குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்:
களியக்காவிளை ஓட்டமரத்தை சேர்ந்தவர் வினு என்ற காளைவண்டி வினு (வயது 45). இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடி-தடி மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி வினு தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து இதற்கான அனுமதி கோரி கலெக்டர் அரவிந்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் அரவிந்த் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து வினுவை குண்டர் சட்டத்தில் களியக்காவிளை போலீசார் நேற்று கைது செய்தனர். இதே போல பரவிளையை சேர்ந்த மகேந்திரகுமார் என்பவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
Related Tags :
Next Story