ஓராண்டுகால தமிழக அரசின் செயல்பாட்டால் யாருக்கும் பாதிப்பில்லை; ஈரோட்டில் ஜான் பாண்டியன் பேட்டி
ஓராண்டுகால தமிழக அரசின் செயல்பாட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஈரோட்டில் ஜான் பாண்டியன் கூறினார்.
ஈரோடு
ஓராண்டுகால தமிழக அரசின் செயல்பாட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்று ஈரோட்டில் ஜான் பாண்டியன் கூறினார்.
மின்வெட்டு
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெ.ஜான் பாண்டியன், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கொங்கு மண்டலத்தில் முதன் முதலாக பொது இடத்தில் அம்பேத்கர் சிலை இங்கு தான் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு த.ம.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். ஓராண்டுகால தமிழக அரசின் செயல்பாட்டால் யாருக்கும் பாதிப்பில்லை. தமிழகத்தில் மின் வெட்டு கடுமையாக உள்ளது. எனவே தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்ற முதல் -அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிகாரம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வு அதிகமாக உள்ளது. இதனை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் எந்த மக்கள் ராஜபக்சேவை வாழ்த்தினார்களோ அவர்களே தற்போது அடிக்க தொடங்கி உள்ளனர். அங்கு பசி, பட்டினி அதிகமாக உள்ளது. இலங்கையில் சிங்கள அரசு கவிழ்ந்தது. இங்கு பா.ஜ.க. அரசை எதிர்த்ததால் காங்கிரஸ் இல்லாமல் போனது. இவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்தனர். அதற்கு தற்போது பரிகாரம் நடக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.
இவ்வாறு ஜான்பாண்டியன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் மயில்துரையன், நகர செயலாளர் குணசேகரன், தொழிற்சங்க தலைவர் குமார், நிர்வாகிகள் மணி, அப்பாரு, சக்திவேல், மாவீரன் பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story