சேலம் விமான நிலைய விரிவாக்க பணி; வருவாய் அலுவலர் மீண்டும் ஆய்வு
சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்த மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா நேற்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார்.
ஓமலூர்,
விமான நிலையம் விரிவாக்கம்
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்துக்கு உட்பட்ட காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டிபுரம், தும்பிபாடி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சேலம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலத்தில் இருந்து சென்னைக்கு தனியார் விமான சேவை நடைபெற்று வந்தது. ஒப்பந்த காலம் முடிந்ததால் விமான சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சேலம் விமான நிலையத்தை சுமார் 590 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்காக விமான நிலையத்தை சுற்றியுள்ள காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டிபுரம், தும்பிபாடி ஆகிய 4 ஊராட்சிகளில் நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு இந்த பகுதி விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் நிலம் கையகப்படுத்த அளவீடு செய்யும் பணி நேற்று மீண்டும் தொடங்கி உள்ளது
நிலம் கையகப்படுத்த ஆய்வு
குறிப்பாக விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் விவசாய நிலங்கள், அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்களின் தற்போதைய நிலவரங்கள் குறித்தும், நிலம் கையகப்படுத்துவது குறித்தும் கணக்கீடு மற்றும் ஆய்வு பணி நேற்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் ஓமலூர் தாசில்தார் வல்ல முனியப்பன், காடையாம்பட்டி தாசில்தார் அருள்பிரகாஷ், விமான நிலைய விரிவாக்க தாசில்தார் சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடங்கள், அதில் உள்ள வீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ரேஷன் கடை
இந்த ஆய்வு பணியை ெதாடர்ந்து காமலாபுரம் ஏர்போர்ட் காலனியில் உள்ள பகுதி நேர ரேஷன்கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் நின்ற பொதுமக்கள், ரேஷனில் வழங்கப்படும் அரிசியை மேலும் தரமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story