எடப்பாடியில், நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம்
எடப்பாடி வட்டாரத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து, விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
எடப்பாடி,
வேலை நிறுத்தம்
எடப்பாடி வட்டார அனைத்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நூல் விலை உயர்வை கண்டித்து நேற்று விசைத்தறி கூடங்கள் நடத்துவோர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் வருகிற 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவுத் தொழில் கூடங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிப்பு
இதுகுறித்து எடப்பாடி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும்போது, தொடர் நூல் விலையேற்றம் காரணமாக தற்போது விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விசைத்தறிக்கு பயன்படுத்தப்படும் 10, 20 மற்றும் 40-ம் நம்பர் நூல்களின் விலை 75 சதவீதம் அதிகமாகி உள்ளது. எனவே நூல் விலையை குறைக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வேலைநிறுத்தம் காரணமாக ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது என்றார்கள்.
Related Tags :
Next Story