கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ்


கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு  எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 May 2022 5:44 AM IST (Updated: 13 May 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுக்கு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ அனுப்பியுள்ளது.

 திருச்சி:

திருச்சி மாவட்டம், சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்தில் 17 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 37 தற்காலிக தூய்மை பணியாளர்களும் வேலை செய்து வருகின்றனர். இவர்களை கண்காணிக்கும் பணியில் சுகாதார ஆய்வாளராக புவனேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் வருகை பதிவேடு எடுக்கும்போது தூய்மைப்பணியாளர்களை ஒருமையில் பேசியும், சாதி பெயரை கூறி திட்டுவதாகவும் புகார் எழுந்தது. இதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஒரு வாரத்துக்குள் அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story