மாநகராட்சி அலுவலகத்தை தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை


மாநகராட்சி அலுவலகத்தை தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகை
x
தினத்தந்தி 13 May 2022 5:44 AM IST (Updated: 13 May 2022 5:44 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி அலுவலகத்தை தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரிகள் முற்றுகையி்ட்டனர்.

திருச்சி:
திருச்சி மாவட்ட தள்ளுவண்டி, தரைக்கடை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது. 20 ஆண்டு காலத்திற்கு மேலாக திருச்சியில் தள்ளுவண்டி, தரைக்கடை வியாபாரம் செய்து வருபவர்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தக்கூடாது. 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி போடப்பட்ட தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை மீறக்கூடாது. பல ஆண்டு காலமாக தரைக்கடை நடத்துபவர்களுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். போராட்டம் நடந்த இடத்திற்கு மாநகராட்சி மேயர் அன்பழகன் வந்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர்கள் கொடுத்து முறையிட்டனர்.

Next Story