வங்கி பேட்டரி அறையில் புகை
வங்கி பேட்டரி அறையில் புகையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் கீழ உத்திரவீதியில் வெள்ளை கோபுரம் அருகே தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை உள்ளது. நேற்று காலை இந்த வங்கியை ஊழியர்கள் வழக்கம்போல் திறந்து பணியை தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று யூ.பி.எஸ். பேட்டரி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து சத்தத்துடன் புகை கிளம்பியது. இதனால் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் பிற்பகலில் வங்கிப்பணிகள் வழக்கம்போல் நடந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story