நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்


நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 5:45 AM IST (Updated: 13 May 2022 5:45 AM IST)
t-max-icont-min-icon

நீலிவனேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்திலும் சுவாமி வீதி உலாவும் நடந்தது. நேற்று இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து கோவிலை வலம் வந்து வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது.

Next Story