மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் செத்தன
மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் செத்தன
ெள்ளகோவில், மே.14-
வெள்ளகோவில் அருகே மின்கம்பி அறுந்து கம்பி வேலியில் விழுந்ததால் மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் மின்சாரம் பாய்ந்து செத்தன.
மின்கம்பி அறுந்து விழுந்தது
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் விசாலாட்சி. இவர் 25 மாடுகளை வளர்ந்து வருகிறார். இதற்காக மாட்டுப்பட்டி அமைத்துள்ளார். மாடு மேய்க்கும் வேலையாட்கள் தினமும் மாட்டுப்பட்டிக்கு வந்து மாடுகளை அவிழ்ந்து அந்த பகுதியில் உள்ள காடுகளுக்கு மேய்ச்சலுக்காக ஓட்டிச்செல்வர். பின்னர் மாலையில் மாடுகளை பட்டிக்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலை 25 மாடுகளையும் அந்த பகுதியில் உள்ள காடுகளுக்கு மாடு மேய்ப்பவர் ஓட்டி ச்சென்றார். அங்குள்ள தரிசு நிலங்களில் உள்ள புற்களை மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பின்னர் மாலையில் மாடு மேய்க்கும் நபர் மாடுகளை மாட்டுப்பட்டிக்கு ஓட்டி வர முயன்றார். அப்போது தோட்டத்திற்கு மேல் சென்ற மின்கம்பி அறுந்து தோட்டத்தில் போடப்பட்டிருந்த கம்பி வேலியில் விழுந்தது. இதனால் கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்தது அருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது.
4 மாடுகள் செத்தன
இதில் 4 மாடுகள் செத்தன. இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் கால்நடை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவர் பிரியா சம்பவ இடத்திற்கு சென்று செத்துப்போன மாடுகளை மருத்துவ பரிசோதனை செய்தார். அதன் பின்னர் 4 மாடுகளையும் சொந்தமான தோட்டத்திலேயே பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி ஒரே இடத்தில் புதைத்தனர். செத்துப்போன போன மாடுகள் தினசரி 20 லிட்டர் பால் கொடுக்க கூடிய கலப்பின பசு வகையை சேர்ந்ததாகும். மாடுகளின் மதிப்பு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story