சான்பாடாவில் திருடன் என நினைத்து வார்டு பாயை அடித்து கொன்ற 6 பேர் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 13 May 2022 5:18 PM IST (Updated: 13 May 2022 5:18 PM IST)
t-max-icont-min-icon

சான்பாடாவில் திருடன் என நினைத்து வார்டு பாயை அடித்து கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 
சான்பாடாவில் திருடன் என நினைத்து வார்டு பாயை அடித்து கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பல் தாக்குதல்
நவிமும்பை நெரூல் சிர்வானே கிராமத்தை சேர்ந்தவர் லலித் கோயல் (வயது27). இவர் மும்பை பரேலில் உள்ள கே.இ.எம் ஆஸ்பத்திரியில் வார்டு பாயாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று காலை 7 மணிக்கு வேலைக்கு சென்று விட்டு பிற்பகல் 3 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மாலை 4.11 மணி அளவில் சான்பாடா போலீசாருக்கு டெலிபோன் அழைப்பு ஒன்று வந்தது. 
இதில் பேசிய அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் சான்பாடா செக்டர் 5-ம் நம்பர் காவ்தேவி கோவில் அருகே ஒருவரை பிடித்து கும்பல் சரமாரியாக அடித்து உதைப்பதாகவும், உதவிக்கு வரும்படியும் தெரிவித்தார். இதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
வார்டு பாய் கொலை
அங்கு படுகாயத்துடன் கிடந்த வாலிபரை மீட்டு வாஷி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வார்டு பாய் லலித் கோயல் என தெரியவந்தது. 
சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
6 பேர் கைது
அப்போது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய மயூரேஷ் மாத்ரே (வயது26), கபீஷ் பாட்டீல் (33), நீரஜ் முலே (21), ஜித்தேந்திரா மால்வி (27), கணேஷ் பாட்டீல் (29), காவ்ராவ் காவ்லி (19) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில், நெரூலை சேர்ந்த லலித் கோயல் சான்பாடாவில் சந்தேகப்படும்படி நடமாடியதாகவும், இதனால் அக்கும்பல் திருடன் என கருதி அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

Next Story