அவுரங்கசீப் கல்லறைக்கு சென்ற எம்.ஐ.எம். கட்சி தலைவரால் சர்ச்சை- சிவசேனா, நவநிர்மாண் சேனா கண்டனம்


படம்
x
படம்
தினத்தந்தி 13 May 2022 5:28 PM IST (Updated: 13 May 2022 5:28 PM IST)
t-max-icont-min-icon

அவுரங்கசீப் கல்லறைக்கு எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

மும்பை, 
அவுரங்கசீப் கல்லறைக்கு எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு சிவசேனா, நவநிர்மாண் சேனா கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
குரைப்பவர்கள், குரைக்கட்டும்
அவுரங்காபாத்தில் நேற்று  எம்.ஐ.எம். கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், ெதலுங்கானா எம்.எல்.ஏ.வுமான அசாதுதீன்  ஒவைசி கலந்து கொண்டார். கூட்டத்தில் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என கூறிய ராஜ் தாக்கரேயை அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் பேசியதாவது:- 
குரைப்பவர்கள், குரைக்கட்டும். நாம் அவர்களை கண்டுகொள்ளாமல் சிங்கம் போல நகர்ந்து செல்ல வேண்டும். சிலரின் பெயரால் நமக்கு வலை விரிக்கப்படுவதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நாம் விழிப்பாக இருந்து, அதில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். யாருடைய கருத்துக்கும் பதில் அளிக்க நான் இங்கு வரவில்லை. தனது சொந்த வீட்டில் இருந்தே துரத்தப்பட்டவர்கள் பற்றி சொல்வதற்கு என்ன இருக்கிறது. நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை. அங்கீகரிக்க தகுதி இல்லாதவர்களுக்கு நாம் ஏன் பதில் அளிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார்.
சர்ச்சை
இதேபோல முன்னதாக அவர் அவுரங்காபாத்தில் உள்ள அவுரங்கசீப்பின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார். இந்த விவகாரம் மராட்டியத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசாதுதீன் ஒவைசி அவுரங்கசீப்பின் கல்லறைக்கு சென்றதற்கு சிவசேனா, நவநிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. 
அதே நேரத்தில் அசாதுதீன் ஓவைசிக்கு அவருடன் அவுரங்கசீப் கல்லறைக்கு சென்ற எம்.ஐ.எம். கட்சி அவுரங்காபாத் எம்.பி. இம்தீயாஸ் ஜலீல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.


Next Story