திருச்செந்தூரில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
திருச்செந்தூரில் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக ஆவுடையப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் உட்கோட்டத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஹர்ஷ்சிங் கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் கோட்டைகுப்பம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கே.ஆவுடையப்பன் பதவி உயர்வு பெற்று, திருச்செந்தூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டாக ஆவுடையப்பன் பொறுப்பேற்று கொண்டார்.
Related Tags :
Next Story