கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி


கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி
x
தினத்தந்தி 13 May 2022 6:44 PM IST (Updated: 13 May 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி இன்று நடந்தது. இதில் தாசில்தார் பவித்ரா கலந்துகொண்டு, கிராம நிர்வாகம், வருடாந்திர பதிவேடு பராமரிப்பு, நில அளவை உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
ஆன்லைன் பட்டா வழங்கும் முறை குறித்து ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது 2-ம் கட்ட பயிற்சியாக இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதே போல், மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இன்று புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story