தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 13 May 2022 7:24 PM IST (Updated: 13 May 2022 7:24 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல் :

சேதம் அடைந்த மின்கம்பங்கள்
திண்டுக்கல் பஸ்நிலையத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் செல்லும் சாலையில் ஒரு மின்கம்பமும், தபால் நிலையத்தின் அருகில் ஒரு மின்கம்பமும் சேதம் அடைந்துவிட்டன. பலத்த காற்று வீசும் போது அவை முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை நடவேண்டும். -காளிதாஸ், கோணப்பட்டி.

சுகாதாரக்கேடு அபாயம் 
ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒருசில கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. கழிப்பறைகளுக்கு அருகே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக்கேடு உருவாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி கழிப்பறைகளை முறையாக பராமரிக்க வேண்டும். -நந்தகோபால், ஆண்டிப்பட்டி.

குண்டும், குழியுமான சாலை 
பழனி அருகே கொத்தயம் ஊராட்சி அருவங்காட்டுவலசு பிரிவில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அதோடு சாலை முழுவதும் கற்கள் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும். -கண்ணன், கொத்தயம்.

பஸ்நிலையத்தில் நெரிசல் 
போடி பஸ் நிலையத்துக்குள் கடைகள் முன்பும், பஸ்கள் வரும் இடத்திலும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ் நிலையத்தில் வாகன நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருக்கிறது. எனவே பஸ் நிலையத்துக்குள் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும். -மணிகண்டன், போடி.

சாக்கடை கால்வாய் வசதி 
ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சி வி.கூத்தம்பட்டியில் சாக்கடை கால்வாய் வசதி முழுமையாக இல்லை. இதனால் கழிவுநீர் சீராக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே மழைநீர் தேங்குகிறது. பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு சாக்கடை கால்வாய்களை முழுமையாக கட்டித்தர வேண்டும். -வேல்முருகன், வி.கூத்தம்பட்டி.

சாலை சீரமைப்பு அவசியம் 
கோபால்பட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியில் இருந்து சில்வார்பட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், சில்வார்பட்டி.

சாக்கடை கால்வாய் அடைப்பு
கம்பம் 7-வது வார்டு நேருஜிதெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயை முழுமையாக தூர்வார வேண்டும். ஜெயபிரகாஷ், கம்பம்.

Next Story