நூலகர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது


நூலகர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2022 7:32 PM IST (Updated: 13 May 2022 7:32 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே நூலகர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியரான இவர், தற்போது அதே கிராமத்தில் உள்ள நூலகத்தில் நூலகராக பணிபுரிந்து வந்தார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரியசாமியின் மருமகளான கோமளவள்ளி, எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதே கிராமத்தை சேர்ந்த விஷ்ணு மனைவி மணிமேகலை போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார். இதனால் முன்விரோதம் ஏற்பட்டு மணிமேகலை தரப்பினருக்கும், கோமளவள்ளி தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

அடித்துக் கொலை 

இந்த நிலையில் நேற்று மணிமேகலை தரப்பினர் வீடு புகுந்து  பெரியசாமியை அடித்துக் கொலை செய்தனர். இதை தடுக்க வந்த அவரது குடும்பத்தினரையும் மணிமேகலை தரப்பினர் தாக்கினர். 
இதுதொடர்பாக பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி மன்ற தலைவி மணிமேகலை, அவரது கணவர் விஷ்ணு உள்ளிட்ட 7 பேரை வலைவீசி தேடி வந்தனர். 

2 பேர் கைது 

இந்த நிலையில் எடையூர் கருப்பசாமி கோவில் அருகே பதுங்கி் இருந்த ஜோதிவேல் என்கிற கலியன்(56), இவரது மகனும், ஊராட்சி மன்ற தலைவி மணிமேகலையின் கணவருமான விஷ்ணு (28) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவி மணிமேகலை, இவரது ஆதரவாளர்களான அஜய்குமார், சுப்பிரமணியன் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனா். 

Next Story