வாலிபர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி, மே.14-
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி விளையாட்டு வீரரை வெட்டி கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், பிரவின்குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் அவர் மீது கஞ்சா விற்பனை வழக்கு உள்பட பல வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருந்தது தெரியவந்தது.
இதேபோல் கடந்த மாதம் 22-ந் தேதி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் ஷெட்டர் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரத்து 500 மதிப்புள்ள பொருட்கள் திருட்டுபோய் விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து. பரணிகுமார் (21) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது கோட்டை, காந்திமார்க்கெட் பகுதிகளில் 10 இருசக்கர வாகன திருட்டு வழக்கும், கோட்டை போலீஸ் நிலைய பகுதியில் முன்விரோதத்தால் இருசக்கர வாகனத்தை எரித்த வழக்கு உள்பட 15 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்குகளில் தொடர்புடைய பிரவின்குமார், பரணிகுமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 2 பேரிடமும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story