வாகனங்களை கணக்கெடுக்கும் பணி


வாகனங்களை கணக்கெடுக்கும் பணி
x
தினத்தந்தி 13 May 2022 2:25 PM GMT (Updated: 2022-05-13T19:55:52+05:30)

வாகனங்களை கணக்கெடுக்கும் பணி

தொட்டியம், மே.14-
தொட்டியம் காட்டுப்புத்தூர் சாலையில் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணி முசிறி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. சாலைகளின் தரத்தை சோதனை செய்யும் விதமாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் இந்த பணியை முசிறி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கேசவன், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். ஒரு வாரம் நடைபெறும் இப்பணியில் உதவி பொறியாளர்கள் உமேஸ்,சுரேஷ்சந்திரன், சாலை ஆய்வாளர்கள், சாலைப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story