மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் சொத்துவரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்:
மனுகொடுக்கும் போராட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சொத்துவரி உயர்வை கண்டித்து மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடந்தது. இதற்கு நகர செயலாளர் அரபுமுகமது தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆசாத், கல்யாணசுந்தரம், கவுன்சிலர் ஜோதிபாசு உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
அதைத்தொடர்ந்து சொத்துவரி உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டபடியே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் சென்றனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். முன்னதாக மாநகராட்சி அலுவலகம் முன்பு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதில் கவுன்சிலர் கணேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
தாடிக்கொம்பு
இதே போல் தாடிக்கொம்பு, அகரம் ஆகிய பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் அஜாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அய்யலூர் மற்றும் வடமதுரை பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு நடந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் அருள்செல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். பழனி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story