காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 May 2022 8:01 PM IST (Updated: 13 May 2022 8:01 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு, வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

பலாப்பழ சீசன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இதையொட்டி சமவெளியில் உள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வர தொடங்கி உள்ளன. அவை குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அவ்வப்போது கடந்து செல்கின்றன. 

மேலும் வாகனங்களை மறித்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. இந்த நிலையில் சமவெளியில் உள்ள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 5 காட்டுயானைகள் கொண்ட கூட்டம், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் பர்லியார், கே.என்.ஆர். நகர் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு உள்ளன. மேலும் சாலையில் உலா வருகின்றன.

வனத்துறை எச்சரிக்கை

இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது.  

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பலாப்பழ சீசன் நிலவுவதால் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் கோடை சீசன் தொடங்கி உள்ளதால், சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் இயக்கப்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காட்டுயானைகளை கண்டால் கீழே இறங்கி செல்பி எடுப்பது, சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story