கோட்டூர் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம்


கோட்டூர் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம்
x
தினத்தந்தி 13 May 2022 8:02 PM IST (Updated: 13 May 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோட்டூர் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

பந்தலூர்

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோட்டூர் சோதனைச்சாவடிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அது விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

போலீஸ் சோதனைச்சாவடி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ளது, கோட்டூர் கிராமம். இது தமிழக-கேரள எல்லையில் உள்ளதால் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கடத்தல் சம்பவங்களை தடுக்கவும் அங்கள்ள பெரியபாலத்தை ஒட்டி போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டது.

இந்த சோதனைச்சாவடிக்கு பள்ளத்தாக்கான பகுதியில் கட்டிடம் கட்டப்பட்டு இருந்தது. அந்த பள்ளத்தாக்கான பகுதியில் இருந்து மேடான பகுதியில் உள்ள சாலைக்கு போலீசார் வந்து, வாகனங்களை சோதனையிடுவதும், கண்காணிப்பில் ஈடுபடுவதும் சிரமமாக  இருந்தது.

புதிய கட்டிடம்

மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் காணப்பட்டது. இதனால் அங்கு பணியாற்றும் போலீசார் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சாலையோரத்தில் புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. 

தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் நிதியில் இருந்து பல லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.  தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் அந்த கட்டிடம், விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story