தண்டவாளத்தில் மரம் விழுந்தது


தண்டவாளத்தில் மரம் விழுந்தது
x
தினத்தந்தி 13 May 2022 8:02 PM IST (Updated: 13 May 2022 8:02 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் மரம் விழுந்தது. இதனால் 1 மணி நேரம் மலைரெயில் தாமதமாக சென்றது.

குன்னூர்

குன்னூர்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் மரம் விழுந்தது. இதனால் 1 மணி நேரம் மலைரெயில் தாமதமாக சென்றது. 

மலைரெயில்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலைரெயிலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், மலைரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை 7.15 மணிக்கு ஊட்டிக்கு மலைரெயில் புறப்படும். தொடர்ந்து 10.15 மணிக்கு குன்னூரை அடையும். பின்னர் 11.30 மணிக்கு ஊட்டியை அடையும். இதேபோன்று ஊட்டியில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்படும் மலைரெயில் குன்னூரை மாலை 3.10 மணிக்கு அடைகிறது. பின்னர் 5.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தை சென்றடையும். 

மரம் விழுந்தது

இந்த நிலையில் இன்று மதியம் 2.15 மணிக்கு ஊட்டியில் இருந்து மலைரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. குன்னூர்-ஊட்டி மலைரெயில் பாதையில் லவ்டேல்-கேத்தி ரெயில் நிலையங்கள் இடையே தண்டவாளத்தில் சூறாவளி காற்று காரணமாக மரம் முறிந்து விழுந்து கிடந்தது. 

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மலைரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற ரெயில்வே ஊழியர்கள், தண்டவாளத்தில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மலைரெயில் தாமதமாக புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு குன்னூரை அடைந்தது. அங்கிருந்து சுமார் 1 மணி நேரம் தாமதமாக 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது. 


Next Story