அசானி புயல் காரணமாக வால்பாறையில் மழை பெய்து வருகிறது. இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் உயருகிறது
சோலையார் அணையின் நீர்மட்டம் உயருகிறது
வால்பாறை
அசானி புயல் காரணமாக வால்பாறையில் மழை பெய்து வருகிறது. இதனால் சோலையார் அணையின் நீர்மட்டம் உயருகிறது.
சோலையார் அணை
வால்பாறையில் கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தென்மேற்கு பருவமழை நின்று போனது.
அதைத்தொடர்ந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் வால்பாறையில் பெரிய அளவில் மழை பெய்ய வில்லை.
இதனால் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையான சோலையாறு அணை நீர்மட்டம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து குறைய தொடங்கியது.
நீர்மட்டம்
இந்த நிலையில் பிப்ரவரி மாத இறுதியில் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. இதனால் வால்பாறையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே சென்றது.
வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பெய்த கோடைமழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் உயர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் அசானி புயல் காரணமாக வால்பாறையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சோலை யாறு அணையில் 34 மி.மீ, கீழ்நீராரில் 37 மி.மீ., மேல்நீராரில் 67 மி.மீ., வால்பாறையில் 36 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
மழை
இதன் காரணமாக சோலையார் அணையின் நீர்மட்டம் 27.15 கன அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 70.80 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் பி.ஏ.பி. திட்ட விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு உதவிகரமாக இருக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
Related Tags :
Next Story