காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு
வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
வேடசந்தூர்:
கரூர் காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் பாளையம், கோவிலூர், எரியோடு, தருமத்துப்பட்டி, ஒட்டநாகம்பட்டி, காளாஞ்சிபட்டி ஆகிய ஊர்களில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கதொட்டிகளில் குடிநீர் ஏற்றப்படுகிறது. பின்னர் அங்கிருந்து குழாய் மூலம் வேடசந்தூர், திண்டுக்கல், தாடிக்கொம்பு, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கரூரில் இருந்து வேடசந்தூர் வரை 6-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் கரூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவிரி குடிநீர் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் குடிநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story