ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் சித்திரை தேரோட்டம்


ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
x
தினத்தந்தி 13 May 2022 8:35 PM IST (Updated: 13 May 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடந்தது.

ஏரல்:
ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. விழா நாட்களில் காலையில் சிறப்பு வழிபாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது. 10-ந்தேதி பஞ்சமுக விநாயகர் உருகு சட்டசேவையும், சிவப்பு சாத்தி, வெள்ளை சாத்தி, பச்சை சாத்தி திருக்கோலத்தில் திருவீதி உலா நடைபெற்றது. 11-ந்தேதி இரவு பஞ்சமுக விநாயகர் யதாஸ்தான சேர்க்கை நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலையில் விநாயகர் திருத்தேரில் ஆறுமுகமங்கலம் ரதவீதிகளில் வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆயிரத்தெண் விநாயகர் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story